ஏழு அடி நீளம் கொண்ட மலைமாம்பு ஒன்று புகையிரதத்தில் மோதுண்டு மரணித்துள்ளதாக ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
உணவு தேடி சென்றவேளையில் இந்த மலைமாம்பு ஹற்றன் ஸ்டெதன் பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு துண்டு துண்டாக சிதைந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம்( 04.05.2018) வெள்ளிகிழமை காலை சம்பவித்துள்ளது.
இதன்போது ஹற்றனில் இருந்து கண்டி பகுதியை நோக்கி பயணித்த புகையிரதத்தில் சிக்குண்ட மலைப்பாம்பின் உடல் ஹற்றன் ரொசல்ல இடைப்பட்ட ஸ்டெதன் பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை புகையிரத வீதியின் திருத்த பணியில் ஈடுபட்ட உத்தியோகத்தர்களினால் இந்த மலைமாம்பின் உடலம் இனங்காணப்பட்டு ஹற்றன் பொலிஸாருக்கு அறிவிக்கபட்ட நிலையில் இது தொடர்பாக நல்லதன்னி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளது.
மலையகத்தில் இதுவே பாரிய மலைபாம்பு எனவும் வட்டவளை வனபகுயில் இது போன்ற மலைபாம்புகள் காணப்படுவதாகவும் வனவிலங்கு காரியால அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர் .