அம்பாறை -திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ள மயானபூமியை தனியார் ஒருவர் கையகப்படுத்தும்நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு திருக்கோவில் பிரதேச மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது திருக்கோவில்பிரதேச செயலாளரினால் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை– திருக்கோவில் – தாண்டியடி சங்கமன் கிராமம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளமயானப்பூமியை தனியார் ஒருவர் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனைஅறிந்த பொது மக்கள் திருக்கோவில் பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளனர்.
அத்துடன்மயானபூமியை பாதுகாத்து தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரனிடம்பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மயானப்பூமியின் மேற்குப் பிரதேசத்தில்குறிப்பிட்ட பகுதி துப்பரவு செய்யப்பட்டு வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருக்கோவில் பிரதேச செயலாளர் உள்ளிட்ட குழுவினர் அந்த பகுதிக்குசென்று நிலைமைகளை அவதானித்ததுடன், மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும்தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து தற்போது திருக்கோவில் பிரதேசசெயலாளர் எஸ்.ஜெகராஜனால் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது.