30வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்த இராணுவத்தினரை சிறையிலடைத்து அடுத்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருவதாக கண்டி – கெட்டம்பே மகா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டியாகொட ஸ்ரீவிமலதேரர் தெரிவித்துள்ளார்.
எந்தவித ஊழல்களிலும் ஈடுபடாதவர் என்று பெயர்பெற்றிருந்தாலும் இறுதியில் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உலகளாவிய ரீதியிலான மிகப்பெரிய ஊழலை செய்துவிட்டதாகவும் தேரர்குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள்பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் உருவாக்கப்பட்ட வியத்மக என்றஅமைப்பின் சார்பில் செயற்படுகின்ற வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இந்தஅமைப்பின் செயற்பாடு தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக மகாநாயக்க தேரர்களைசந்திப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தார்.
பௌத்தமக்களின் பெரும் தலைமைத்துவங்களான மல்வத்துப்பீட மற்றும் அஸ்கிரியப் பீட மகாநாயக்கதேரர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் ஆசிபெற்றுக்கொண்டார்.
‘வியத்மக’ என்ற அமைப்பு சார்பாக எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்கான அழைப்பையும் மகாநாயக்க தேரர்களுக்கு இதன்போது அவர் வழங்கிவைத்தார்.
தேசியபாதுகாப்பு, பொருளாதாரம், கல்வி உட்பட நாட்டின் விசேட விடயங்களை அடுத்துவரும்அரசாங்கம் எவ்வாறு கையாள வேண்டும் என்பதுபற்றிய பரிந்துரைகளை உருவாக்கிஅறிக்கையில் உள்ளடக்குவதற்கான இந்த மாநாட்டில் மகாநாயக்க தேரர்கள், புத்திஜீவிகள்,சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள் என்று முன்னாள் ஆளுநர்ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இதேவேளைஇதனைத் தொடர்ந்து கண்டி கெட்டம்பே மகா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டியாகொடஸ்ரீவிமல தேரரை சந்தித்த முன்னாள் ஆளுநர் இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழைவழங்கினார்.
இதன்போதுகருத்துவெளியிட்ட தேரர், நாடு பற்றி சிந்திப்பதற்கு எவருக்கும் நேரமில்லை என்பதுமிகுந்த கவலையளிப்பதாகவும், ஆட்சியில் இருப்பவர்களும் தங்களது கைபளை நிரப்புவதுபற்றியே சிந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் இப்படியான மாநாடுகள் மிக முக்கியமானவை என்று அடையாளப்படுத்திய கெப்பட்டியாகொடஸ்ரீவிமல தேரர், ஊழல் மோசடிகளில் ஈடுபடாதவர் என்று பெயர்பெற்ற பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் இறுதியில் உலகளாவிய ரீதியிலான மிகப்பெரிய மோசடியில்ஈடுபட்டுவிட்டார் என்றும் தெரிவித்தார்.