சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக அதன் தலைவர் மகேந்திர சிங் தோனி ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.
இந்த நிலையில், இப்போட்டியின் போது திடீரென சிறுவன் ஒருவன் மைதானத்திற்குள் நுழைந்து தோனியின் காலில் விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்தக் காட்சி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.