நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகி வருகிறது.
மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.
தோற்றத்தில் சாவித்திரி போன்று உள்ள கீர்த்தி சுரேஷ் அவரை போன்றே வாழவும் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக நடிகை சாவித்திரி ஒவ்வொரு திரைப்படத்தின் முடிவிலும் தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களுக்கு தங்கம் பரிசளிப்பதனை வழக்கமாக கொண்டிருந்தார்.
அந்த முறையினை நடிகை கீர்த்தியும் பழகியுள்ளார் என தெரியவந்துள்ளது. அவர் இறுதியாக நடித்த படங்களில் பணியாற்றியவர்களுக்கு கீர்த்தி தங்கம் வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, படமாக்கப்பட்டுள்ள படத்தில் ஜெமினி கனேசனுக்கும் சாவித்திருக்கும் இடையில் சமந்தா வந்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு பலர் விடை தேடி வருகின்றனர்.
உண்மையாக ஜெமினி கனேசனின் வாழ்க்கையில் பல மர்மங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. ஜெமினி கனேசனுக்கு 4 மனைவிகள் உள்ளனர். 3வதாக சாவித்திரியை திருணம் செய்துள்ளார் என கூறப்படுகின்றது.
எப்படியிருப்பினும் ஜெமினி கனேசனுக்கும் சாவித்திரிக்கும் திருமணம் நடந்தில்லை என்பதே உண்மையான வரலாறாக பார்க்கப்படுகின்றது. அப்படியெனில் சமந்தா இந்த உண்மையை கூறுவதற்காக தான் திரைப்படத்தில் நடிக்கின்றாரா என பலரது சந்தேகமாக உள்ளது.