Loading...
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய, 36 வாகனச் சாரதிகளைக் கைது செய்துள்ளதாக, மாராவில பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்தனர்.
Loading...
அதிக வேகத்தில் வாகனத்தைச் செலுத்திச் சென்றமை, வீதி சமிக்ஞைகளைப் பொருட்படுத்தாது பயணித்தமை, காப்புறுதிச் சான்றிதழ் மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனத்தைச் செலுத்தியமை, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தமை மற்றும் போதையில் வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Loading...