அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பல் போஸ்டுகள் மீம்ஸுகள் சிங்கிள்ஸை (காதலி/காதலன் இல்லாதவர்கள்) பற்றி இருக்கும்.
எனவே, இவர்களை குஷிபடுத்த பேஸ்புக் நிறுவனம் மார்க் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்ய உள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது. அதுவும் முக்கியமாக பேஸ்புக் மீதான நம்பிக்கை பலருக்கும் குறைந்தது.
இந்நிலையில் இவை அனைத்திலும் இருந்து மீண்டு வர புதிய சேவையை அறிமுகம் செய்ய இருக்கிறார் மார்க். அதன்படி, கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் பேஸ்புக் டேட்டிங் குறித்த தகவலை வெளியிட்டார்.
மேலும் சிறிய காலம் சேர்ந்து இருப்பது போன்றல்லாமல் நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை இது வழங்கும் என தெரிவித்துள்ளார்.