Loading...
மஹாவலி கங்கையில் விடுதலைப் புலி உறுப்பினர்களின் இலக்க தகடுகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சூரியபுர, பாலத்திற்கு அருகில் மஹாவலி கங்கையில் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய பொதியில் இந்த தகடுகள் கிடைத்துள்ளன.
வலையில் சிக்கிய பொதியில் விடுதலைப் புலிகளின் 196 இலக்க தகடுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
நான்கு இலக்கங்களும் தமிழ் மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்களும் தகட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசேட விசாரணைகள் சூரியபுர பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீ.கே.தேவபிரிய பண்டார தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...