இந்தியாவில் ஆண் குழந்தையை பெற்றெடுக்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் வீரேந்திரா. இவர் மனைவி நிதி அரோரா. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அரோரா கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.
பொலிசார் இது குறித்து வீரேந்திராவிடம் விசாரணை நடத்திய நிலையில் தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது அரோரா சடலமாக கிடந்ததாக கூறினார். மேலும் கொள்ளையர்கள் தனது மனைவியை கொன்றிருக்கலாம் எனவும் கூறினார்.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்திய போது ஆண் குழந்தை இல்லாததால் வீரேந்திரா அடிக்கடி அரோராவுடன் சண்டை போடுவார் என தெரியவந்தது.
மேலும் மூன்றாவது குழந்தையை பெற்று கொள்ள அரோரா விருப்பமில்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்தது.
இதனால் பொலிசாரின் சந்தேகம் வீரேந்திரா மீது விழுந்ததில் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.
அதில் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், மூன்றாவது குழந்தை குறித்து செவ்வாய்கிழமை எங்களுக்குள் மீண்டும் சண்டை வந்தது.
அப்போது ஆத்திரத்தில் தலையணையால் அவர் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து வீரேந்திராவை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் இரண்டு குழந்தைகளும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டன