Loading...
தமிழ்நாட்டில் NEET, ஸ்டெர்லைட், காவிரி போன்று நிறைய விஷயங்கள் பிரச்சனையாக இருக்கிறது. இதில் எல்லாவற்றிலும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று பலரும் போராடி வருகிறார்கள். ஆனால் முடிவு என்பது எப்போது என தெரியவில்லை.
இந்த நேரத்தில் NEET தேர்வு மையங்கள் அனைத்தும் மற்ற மாநிலங்களில் வைத்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் ஏழ்மையில் இருக்கும் மாணவர்கள் மற்ற இடங்களுக்கு செல்ல கஷ்டப்படுகிறார்கள்.
Loading...
தற்போது நடிகர் பிரசன்னா NEET தேர்வு எழுத செல்லும் 2 கஷ்டப்படும் மாணவர்களுக்கு அல்லது அரசு பள்ளி மாணவர்களின் போக்குவரத்து செலவை ஏற்பதாக கூறியுள்ளார். அப்படி யாராவது இருந்தால் அவர்களது தேர்வு பதிவு போன்றவற்றை தனக்கு தெரியப்படுத்துங்கள் என டுவிட் செய்துள்ளார்.
Loading...