கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியின் போது அடுத்தடுத்து வந்த கேட்சுகளை ஜடேஜா தவறவிட்டதால், மிகவும் அமைதியாக காணப்படும் டோனி அப்போது சற்று கோபமடைந்தார்.
ஐபிஎல் தொடரின் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதின.
சமீபகாலமாக பார்மின்றி தவித்து வரும் ஜடேஜா இப்போட்டியிலும் சொதப்பினார். துடுப்பாட்டத்தில் 12 பந்துகளுக்கு 12 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
இதைத் தொடர்ந்து கொல்கத்தா அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது துவக்க வீரரான சுனில் நரைன் ஆசிப் ஓவரில் கொடுத்த அடுத்தடுத்த இரண்டு கேட்சுகளை தவறவிட்டார்.
இப்போட்டியில் சென்னை அணியோ 177 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தால், கொல்கத்தா அணியின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த வேண்டும் என்று டோனி கணக்கு போட்டிருந்த போது, ஜடேஜா இப்படி கேட்சுகளை விட்டதால் சற்று கோபத்துடன் காணப்பட்டார்.
இருப்பினும் சக வீரர்களான ராயுடு, ரெய்னா கேட்ச் விட்ட அவரை தேற்றினர். தான் தானே கேட்ச் விட்டே நானே அவரின் விக்கெட்டை எடுக்கிறேன் என்பது போல ஜடேஜா நரைனின் விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அந்த கேட்சுக்கு பின் நரைன் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.