9 வயது சிறுமியை ஆந்திராவில் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். குண்டூரில் சாக்லெட் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் மீண்டும் வீட்டில் வந்து விட்டுவிட்டு யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
சிறுமியை மருத்துவரிடம் பரிசோதித்த பெற்றோர் அவர் கொடூரமாக பாலியல்பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து குண்டூரில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டதுடன், குற்றவாளியைக் கைது செய்யக் கோரிய நடந்த பல மணி நேர மறியலால் சுமார் 20 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. குற்றம்சாட்டப்பட்டவரின் மகன் பொதுமக்களால் தாக்கப்பட்டான்.
இதையடுத்து மகனுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டதாக உறவினர்களிடம் செல்போனில் அழைத்து கூறிவிட்டு, குற்றம்சாட்டப்பட்ட நபர் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.