10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஏப் 25-ம் தேதி அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றார். மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்காக 10 நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்தார். அங்கு சில வணிகவளாகங்களை சுற்றிப்பார்ப்பது, மெட்ரோ ரெயிலில் செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
இந்தநிலையில், அமெரிக்காவில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் மே 9ம் தேதி நடைபெறும் ’காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.
அதன்பின் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு தனது புதிய கட்சிப் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிய வந்துள்ளது. அனேகமாக இந்த மாத இறுதியில் ரஜினியின் அரசியல் கட்சிப் பெயர் அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.