மாவனல்ல மாவட்ட நீதிமன்றத்தினுள் கையடக்க தொலைப்பேசி ஒன்று ஒளித்தமையினால் காணி வழக்கிற்கு வந்தவரை சிறைக்கூண்டுக்குள் வைப்பதற்கு மாவனெல்ல மாவட்ட நீதிபதி மஹிந்த வியனகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
காணி வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு வருகைத்தந்த மில்லன்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே சிறைக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கிற்காக வந்தவர் நீதிமன்றத்திற்கு வரும் போது கையடக்க தொலைபேசியை செயழிலக்க செய்ய விட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.
எனினும் நீதிமன்றத்தில் நித்திரையடைந்தவரின் தொலைபேசி கீழே விழுந்து உடைந்துள்ளது. அதனை மீளவும் பொருத்தி அவர் தனது பைக்குள் போட்டு கொண்ட போதிலும், அதனை செயழிலக்க செய்ய அவர் மறந்துவிட்டார். இதனால் சற்று நேரத்தில் கையடக்க தொலைபேசி ஒளிக்க ஆரம்பித்துள்ளார்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் வகையில் தொலைபேசி ஒளித்தமையினால் கையடக்க தொலைபேசியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற கூண்டிற்குள் தடுத்து வைப்பதற்கு மானவெல்ல மாவட்ட நீதிபதி மஹிந்த லியனகம நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.