கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை கடும் வெப்பத்துடன்கூடிய வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல்திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களின் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளைமறுதினம் திங்கட்கிழமை காலைவரை மழையுடனான வானிலை சில பகுதிகளில் நீடிக்கும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.