Loading...
சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இலங்கைக்கு கூடுதலான வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என மூலோபாய அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் உட்பட கூடுதலானோருக்குத் தொழில் வாய்ப்புகளை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தும் என்றும் உலக வர்த்தக மையத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04) இடம்பெற்ற நிகழ்வின்போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Loading...
இந்தப் புதிய உடன்படிக்கையின் மூலம் சிங்கப்பூர் பிரஜைகள் சுதந்திரமாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியும் என்ற குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
Loading...