வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியில் பல மாதங்களாக ஆபத்தான முறையில் காணப்பட்ட குளவிக்கூடுகளை பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, பண்டாரிக்குளம் கிராம சேவகர் ஒத்துழைப்புடன் நேற்று இரவு 7.00 மணி தொடக்கம் 11.00 மணிவரை சுமார் 4மணி நேர பலத்த போராட்டத்தின் மத்தியில் பாடசாலை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது
சுமார் 2000 மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப் பாடசாலையில் அண்மைக் காலமாக ஆபத்தான குளவிகள் கூடு கட்டி வருவதாகவும், அதனை தம்மால் அழிக்க முடியாதுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து திணைக்களம் , வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் பாடசாலை அதிபர் உத்தியோகபூர்வமாக தகவல் வழங்கியிருந்தார். ஆனால் அவர்கள் இது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினால் இவர்கள் அனைவரும் இணைந்து அகற்றியுள்ளனர்.
பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாத இவ் திணைக்களங்கள் எமது மாவட்டத்திற்கு தேவையா? குறித்த அதிகாரிகளின் இல்லத்தில் இவ்வாறு குளவிக்கூடு கட்டிருந்தால் இவ்வாறு அசமந்த போக்காக செயற்பாடுவர்களா? குறித்த திணைக்களங்களில் பணிபுரிபவர்கள் பெருபான்மை இனத்தினை சேர்ந்தவர்கள் என்பதாலையே இவ்வாறு செயற்படுகின்றார்களா? என பாடசாலையின் பழைய மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.