எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவை வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ள நிலையில், இதில் தமக்கு ஈடுபாடு இல்லை என சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், தம்மைவிட சிறந்த முறையில் செயல்பட கூடியவர்கள் இருக்கின்றமையினால், அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்து களம் இறங்குவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டும் தமது ஆட்சியை நிலைநிறுத்த பயனற்ற அமைச்சரவை மாற்றத்தினை முன்னெடுப்பதால் எவ்வித மாற்றங்களும் ஏற்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்துள்ளார்.