சிறு வயதிலிருந்து வீட்டு வேலைகளில் பிள்ளைகளை ஈடுபடுத்துவது அவர்களுக்குப் பொறுப்புணர்வை அளிக்கும்.
ஆனால் சிறு பிள்ளைகளை வீட்டு வேலைகளில் பங்கேற்க ஊக்குவிப்பது மிகவும் சிரமம்.
அந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம்?
சில வழிகள்:
1. சிறு சிறு வேலைகள், அதிகக் கண்காணிப்பு
பிள்ளைகள் மன வளர்ச்சி, அறிவு வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கு முதலில் சிறு வேலைகளைக் கொடுத்துப் பழக்குவது அவசியம்.
விளையாட்டு நேரத்திற்குப் பிறகு விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைப்பது போன்ற சிறு வேலைகளில் பெற்றோர் ஆரம்பிக்க வேண்டும்.
ஆரம்பத்தில் பிள்ளைகள் தடுமாறுவார்கள். அவர்களுக்குப் பொறுமையாக வழிகாட்ட வேண்டும்.
வேலை பழகியதும், மேசையைச் சுத்தம் செய்வது சமையலின்போது உதவுவது போன்ற கடினமான வேலைகளைப் படிப்படியாக அறிமுகம் செய்யலாம்.
2. கால அட்டவணைக்கு ஏற்ப வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்வது
சிறு வயதில் பிள்ளைகள் நேரத்தைச் சரிவர சமாளிக்கச் சிரமப்படுவார்கள்.
இதனால் அவர்களது வீட்டு வேலைகளை ஓர் அட்டவணையில் எழுதிக் கொடுப்பது அவர்களுக்கு உதவும்.
அல்லது அன்றாடம் வழக்கமாக ஒரே நேரத்தில் இடம்பெறும் வேலைகளைப் பிள்ளைகளிடம் ஒப்படைக்கலாம்.
உதாரணத்திற்கு உணவு உண்ட பின் மேசையைத் துடைத்துச் சுத்தம் செய்வது.
இவ்வாறு வீட்டு வேலைகளைப் பழக்கப்படுத்தும்போது அவர்கள் இன்னும் அதிக ஈடுபாட்டுடன் அவற்றைச் செய்வார்கள்.
3. பொறுமையாக கற்றுக்கொடுப்பது
இவ்வயதில் பிள்ளைகள் வீட்டு வேலைகளில் உதவுவது அவர்களுக்குப் பொறுப்புணர்வு புகட்டுவதற்கும் அவர்கள் கற்றுக்கொள்வதற்கும்.
அவர்கள் சீக்கிரமாக வேலைகளைச் செய்து முடிப்பார்கள் என்றோ தவறுகள் இல்லாமல் அவற்றைச் செய்வார்கள் என்றோ எதிர்பார்க்கக்கூடாது.