யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவின் பாடகி MIA மாயா என்று அழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அமெரிக்க- கனேடிய எல்லையில் சில மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கனடாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவின் ஊடாக கனடாவுக்கு செல்லும்போதே அவர் அமெரிக்க- கனேடிய எல்லையில் தடுக்கப்பட்டார்.
1990 ஆம் ஆண்டில் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பிலான குற்றச்சாட்டுக்காகவே அவர் தடுத்து வைக்கப்பட்டார்
குறித்த காலப்பகுதியில் மாயா லொஸ் ஏஞ்சல்ஸூக்கு சென்ற வேளையில் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது அவர் ஆடையகம் ஒன்றுக்குள் சென்று புது ஆடை ஒன்றை உடுத்திக்கொண்டு வெளியே வரும்போது பிடிக்கப்பட்டார். இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்தே கனேடிய எல்லையில் அவர் தடுத்து வைக்கப்பட்டார்
எனினும் அன்று 40 டொலர் பெறுமதியான ஆடையை தாம், எடுத்தபோதும் இன்று பல மில்லியன் டொலர்களை அமெரிக்காவுக்கு வரியாக செலுத்தி வருகிறேன் என்று அவர் அமெரிக்க அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தன்னை மன்னிக்க முடியும் என்று மாயா வாதிட்டதன் பின்னர், அமெரிக்க அதிகாரிகள் அவரை கனடாவுக்குள் செல்ல அனுமதித்தனர்.