தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் இருந்து இசையமைப்பாளர் அனிருத்தைக் கழட்டிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில், பாதி படத்துக்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார். நடிகர் – இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, இருவரும் பல வருடங்களாக நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள்.
தனுஷ் – அனிருத் இடையில் பிரச்னை வந்தபோது கூட, தன்னை வளர்த்துவிட்ட தனுஷ் பக்கம் போகாமல் அனிருத்துடனே நின்றார் சிவகார்த்திகேயன்.
ஆனால், சிவகார்த்திகேயனின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அனிருத்தைக் கழட்டிவிடுவதாகவே அமைந்துள்ளன. கிராமத்துக் கதை என்றால் டி.இமானையும், நகரத்துக் கதை என்றால் அனிருத்தையும் இசையமைக்கச் சொல்வது சிவகார்த்திகேயனின் வழக்கம்.
ஆனால், ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவா நடிக்கும் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைக்கின்றனர். ஆக, அனிருத்தை அவர் கொஞ்சம் கொஞ்சமாகக் கழட்டிவிடுகிறார் என்கிறார்கள். அதற்கான காரணம் தான் என்னவென்று தெரியவில்லை.