மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நபர் தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்காக அதிக வேகமாக ஓட்டிய சந்தர்ப்பத்திலேயே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் படுகாயமடைந்த நிலையில் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மினுவாங்கொட சந்தியில் உள்ள மின்சார தூணில் தலை மோதுண்டமையால் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் மோட்டர் சைக்கிள் அணி வகுப்பு மூலம் சடலம் மாயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இளைஞனின் உயிரை பறிந்த விபத்து தொடர்பான சிசிடீவி காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.