Loading...
தென் கொரியாவின் நேர மண்டலத்துக்குள் வரும் வகையில், வட கொரியா வெள்ளிக்கிழமை நள்ளிரவில் தனது கடிகாரத்தின் நேரத்தை 30 நிமிடங்கள் முன்னோக்கி அமைத்துக் கொண்டுள்ளது.
வட கொரியா – தென் கொரியா அதிபர்களுடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெற, ஒரே நேர மண்டலம் அமைய வேண்டும் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவிடம் கூறியிருந்தார்.
Loading...
இதையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் புதிய நேர மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
Loading...