Loading...
வில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சிலம்பு அப்பகுதியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியை தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாணவி மறுத்து விட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த மாணவி கல்லூரி முடிந்து வீடு திரும்பிய போது சிலம்பு வழிமறித்து மாணவியை மானபங்கம் செய்ய முயன்றார்.
Loading...
பின்னர் இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குபதிவு செய்து சிலம்புவை கைது செய்தனர்
Loading...