இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கின்றது.
அதன் பின்னரே இந்த நிலைமை குறைவடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடைக்கால பருவக்காலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை, முன்னர் காண்பட்டதனை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், குருணாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் அதிக வெப்பமான காலநிலை நிலவ கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா உட்பட பல பிரதேசங்களில் நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மழையுடன் மின்னேரிய சரணாலயத்தின் ஊடாக செல்லும் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அங்கு சென்றிருந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட பலர் பல மணித்தியாலங்கள் சரணாலயத்திற்குள் சிக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.