பாகிஸ்தானில் குறிப்பிட்ட பெண்களை திருமணம் செய்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்வதுடன், அவர்களின் முதல் இரவு வீடியோவை வைத்து மிரட்டிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானியாவில் வசித்து வரும் பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற சிலர், பாகிஸ்தானில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று நல்ல வாழ்க்கை அமைத்து தருவதாக கூறி அவர்களுடன் நெருக்கமாக இருந்து விடுகின்றனர்.
அதன் பின் அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாமல், திருமணத்திற்கு பின் நடந்த முதலிரவு தொடர்பான வீடியோவை எடுத்துள்ளதாகவும், வெளியில் கூறினால் இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவதாக கூறியுள்ளனர்.
குறிப்பாக பாகிஸ்தானின் மிர்புரில் இருக்கும் இளம் பெண்களுக்கே இந்த கும்பல் வலை விரித்துள்ளது. அதில் சிக்கிய சில பெண்கள் தான் இந்த உண்மையை தற்போது கண்ணீர் விட்டு கூறியுள்ளார்.
அவர்கள் கூறுகையில், பிரித்தானியாவில் வசித்து வரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இங்கிருக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவர்களை திருமணம் செய்து கொள்வர்.
அதன் பின் முதலிரவு நடக்கும் போது அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து பின் அதை வைத்து மிரட்டுவர். வெளிநாட்டிற்கும் அழைத்துச் செல்லமாட்டார்கள்.
இதில் மும்தாஜ் என்பவனே முக்கிய குற்றவாளி எனவும் அவன் இது போன்று 7 பெண்களை திருமணம் செய்து மிரட்டியுள்ளான்.
இதே போன்று அவனுடன் இருக்கும் அன்சார் என்பவன் 5 பெண்களையும், முகமத் என்பவன் மூன்று பெண்களையும், இவை அனைத்துக்கும் மும்தாஜின் குடும்பம் உறுதுணையாக இருப்பதாக கூறியுள்ளனர்.
அவர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமைகள் எல்லாம் தாங்க முடியாமல் தான் கூறியுள்ளதாகவும், அதுமட்டுமின்றி பாகிஸ்தானில் இருக்கும் பெண்கள் இது போன்ற ஆண்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதற்காகவும் இதை அம்பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்