ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட மே தின அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு உட்பட்ட இளைஞர் முன்னணி மகளிர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்தோர் மேதின கூட்டத்தில் கலந்துகொள்ளுகின்றனர்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி வெற்றியை நோக்கி முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டம கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று ஆரம்பமாகும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக கட்சியின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு உயிரிழந்த தலைவர்கள் நினைவு கூரப்படவுள்ளனர்;. அதேபோன்றே மக்களின் நலனுக்காவும் முழு இரவு பிரித் பாராயண நிகழ்வும் பிங்கம் நிகழ்வுகளும் கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முழு இரவு பிரித் பாராயணம் இன்று நடைபெறவுள்ளதுடன் அதனைத் தொடர்;ந்து 100 மஹா சங்கத்தினருக்கு தான நிகழ்வும் இடம்பெறும. இன்று இரவு முதல் மறுநாள் காலை வரையில் பொதுமக்களுக்கு அன்;னதானமும் வழங்கப்படவுள்ளது. இது கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறும் என்று செயலாளர் தெரிவித்தார்