திருட்டுத் தொடர்பில் விசாரிக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரைச் சந்தேகநபர் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் நாரந்தனையில் நேற்று இடம்பெற்றது. அங்கு நேற்றுமுன்தினம் இரவு 15 ஆயிரம் ரூபா திருடப்பட்டதாக முறையிடப் பட்டது.
அதே இடத்தைச் சேர்ந்த ஒருவர்மீது சந்தேகம் ஏற்பட்டதால் விசாரணைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தி லிருந்து பொலிஸார் மூவர் சென்றனர்.
தனது வீட்டில் நின்றிருந்த சந்தேகநபர் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோட முற்பட்டார்.
அவரைப் பொலிஸார் நெருங்கியபோது ஒரு உத்தியோகத்தரின் காலில் கத்தியால் வெட்டிப் படுகாயப் படுத்திவிட்டுச் சந்தேகநபர் தப்பியோடிவிட்டார்.
படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
விசாரணை இடம்பெறுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்