Loading...
ஒழுங்கான தலைமைத்துவம் வழிகாட்டலின் அடிப்படையில் அரசாங்கம் அமைக்கப்படாமையினால் நாட்டின் அபிவிருத்தி பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை தோல்வியடையச் செய்வதே அனைவரினதும் நோக்கமாக இருந்ததே அல்லாமல், சிறந்த தலைமையின் கீழ் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கம் இருக்கவில்லை. இதன் விளைவையே இப்பொழுது நாட்டில் காண்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Loading...
பாணந்துரை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார்.
Loading...