யாழ்ப்பாண மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவால் நடத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடரில், ஆண்கள் பிரிவு நீளம் பாய்தலில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த என்.நிந்துஜன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தலில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த என்.நிந்துஜன் 6.92 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும், எஸ்.கீர்த்திகன் 6.83 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும், காரைநகர் பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.கோகுலன் 6.63 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.