வாள்வெட்டில் ஈடுபடும் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 5 பேர் வாள்கள், கைக்கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து 3 வாள்கள், கைக்கோடரி, முகமூடிகள், 2 மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசங்கள் என்பன மீட்கப்பட்டன. உடுவிலில் சந்தேகத்துக்கு இடமான சிலர் நிற்கின்றனர் என்று கிடைத்த தகவலின்படி அங்கு விரைந்த பொலிஸார் அவர்களை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, மிருசுவில், சாவகச்சேரி, மட்டுவில், கைதடி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் 22க்கும் 27க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.
சந்தேகநபர்கள் யாரை வெட்டுவதற்கு, அல்லது எவரது வீட்டில் அடாவடியில் ஈடுபடத் திட்டமிட்டனர் என்பன உட்பட பல விடயங்கள் தொடர்பிலும் விசரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பிறிதொரு வாள்வெட்டுக் குழுவை வெட்டத் திட்டமிட்டனர் என்பது தெரியவருகிறது. விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிவானிடம் முற்படுத்தப்படுவர் என்று சுன்னாகம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.