மாலை மங்கும் நேரத்தில், நல்ல சூடான, டீ அல்லது காபியுடன் மொறுமொறுவென்றும் ஏதாவது சாப்பிட தோன்றினால் பேபிகார்ன் பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
மாலை நேர ஸ்நாக்ஸ் பேபிகார்ன் பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
பேபிகார்ன் – 10
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சோடா உப்பு – 1 சிட்டிகை
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
பேபிகார்னை நீளமாக இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு மற்றும் சோள மாவு மூன்றையும் ஒன்றாகப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதில் நறுக்கி வைத்துள்ள பேபிகார்னை போட்டு பிரட்டி, அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள பேபிகார்னை ஒவ்வொன்றாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி!!!
இதனை கொத்தமல்லி சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.