கொழும்பு அரசால் முன் னெடுக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தால் வடக்கு அபிவிருத்தி திட்டங்கள் தாமதமடைந்துள்ளன. 50 ஆயி ரம் வீடுகள் அமைக்கும் திட்டம், வலி. வடக்கில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கான உதவிகள் வழங்கல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதி லேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் பணி
கள், அரச தலைவரின் கீழிருந்த தேசிய ஒருமைப்பாடு நல்லி ணக்க அமைச்சால் முன்னெ டுக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தகா ரர்களைத் தெரிவு செய்யும் பணி நிறைவடைந்திருந்தது.
ஒப்பந்தம் கையளிப்பதற்கு அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட இருந்தது. அதற்கிடையில் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரவை மாற்றத்தின் போது, அரச தலைவரின் கீழிருந்த தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சு, அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு அபிவிருத்திக்கு தனியான அமைச்சும் உருவாக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் கல் வீட்டுத் திட்டம், வலி.வடக்கில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கான உதவிகள் வழங்கல் என்பன எந்த அமைச்சு ஊடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படப் போகின்றது என்பது இன்னமும் தெரியவரவில்லை.
மேலும், புதிய அமைச்சுக்களுக்கான திணைக்களங்கள் இன்னமும் அரசிதழில் வெளியிடப்படவில்லை. புதிய மற்றும் மாற்றப்பட்ட அமைச்சுக்களின் செயலர்களும் நியமிக்கப்படவில்லை. கூட்டு அரசினால், நாளை மே தின நிகழ்வு நடத்தப்படவுள்ளது.
இதன் பின்னரே, செயலர் நியமனம், திணைக்களங்கள் அறிவிப்பு என்பன அரசிதழில் வெளியிடப்படவுள்ளது. இந்த மாற்றங்கள் காரணமாக, வடக்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.