மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுடன் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னலினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த நிலையம் பொது மக்களிடம் கோரியுள்ளது.
இதனுடன் கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 – 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
இதேவேளை, இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் மாத்தளை மாவட்டத்தில் சில இடங்களிலும் வெப்பமான காலநிலை நிலவும் என காலநிலை அவதான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.