இன்றைய நாள் எந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சியும் பாராட்டுக்களும் புகழும் கிடைக்கப்போகின்றன என்று தெரிந்து கொள்வோம்.
மேஷம்
உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ப லாபமும் உண்டு. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிஷ்ட எண் – 7, அதிர்ஷ்ட நிறம் – சாம்பல் நிறம்.
ரிஷபம்
சபை தலைவராக வீற்றிருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – வடக்கு, அதிஷ்ட எண் – 9, அதிர்ஷ்ட நிறம் – அடர் சிவப்பு
மிதுனம்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள் நிறம்
கடகம்
உங்களுடைய திறமையான வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். நண்பர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுடைய அன்றாட செயல்பாடுகளில் இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 1, அதிர்ஷ்ட நிறம் – இளம் ஆரஞ்சு
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிஷ்ட எண் – 1, அதிர்ஷ்ட நிறம் – அடர் மஞ்சள்
கன்னி
பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – வடக்கு, அதிஷ்ட எண் – 3, அதிர்ஷ்ட நிறம் – இளம் மஞ்சள்
துலாம்
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிஷ்ட எண் – 9, அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு நிறம்
விருச்சிகம்
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 6, அதிர்ஷ்ட நிறம் – சந்தன வெள்ளை
தனுசு
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – கிழக்கு, அதிஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – பச்சைநிறம்
மகரம்
வாணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கின்ற உங்களுடைய பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பொருள்களைக் கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். அதிர்ஷ்ட திசை – வடக்கு,அதிஷ்ட எண் – 1,அதிர்ஷ்ட நிறம் – இளஞ்சிவப்பு
கும்பம்
தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவீர்கள். . அறிவுத்தேடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.. பணியில் மேன்மை உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – மேற்கு, அதிர்ஷ்ட எண் – 2, அதிர்ஷ்ட நிறம் – வெள்ளை நிறம்
மீனம்
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய அதிர்ஷ்ட திசை – தெற்கு, அதிஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – இளம்பச்சை.