யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செந்தூரன் சுகிர்தா வயது(31) என்ற ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மிகவும் சித்திரவதை செய்யப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற உடற்கூற்று பரிசோதனையினை சட்டவைத்திய நிபுணர் உருத்திராபதி மயூரதன் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது பெண்ணின் உடலில் பல அடிகாயங்கள் இருந்துள்ளதுடன் இது கொலை சட்டவைத்தி நிபுணரின் உடற்கூற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சந்தேகநபரான கணவன் வியாழக்கிழமை(03) குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபரின் வீட்டில் இருந்து அடித்து கொலை செய்வதற்கு பயன்படுத்திய சான்றுபொருட்களான றீப்பை தடி என்பன கைபற்றப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சிணை காரணமாக கடந்த 30ம் திகதி மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த கணவன் மனைவியினை பிள்ளைகள் முன் அடித்து கொலை செய்து விட்டு கொலையினை மறைக்க முற்பட்டுள்ளார்.
மனைவி மயங்கி வீழ்ந்துள்ளதாக கூறி பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளதுடன், பின்னர் அம்புலனஸ் வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
எனினும் குறித்த பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளதுடன், மல்லாகம் நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.சடலம் மல்லாகம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அச்செழு பகுதியில் உள்ள இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது.
கைதான சந்தேக நபரான கணவனை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்திய போது நீதிவான் ஏ.யூட்சன் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்