கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி எதிர்காலத்தில் மகிந்த அணியுடன் இணைந்து பயணிக்கவுள்ளது என்று கட்சியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்தாவது,
-எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான தேர்தல் தொகுதிகள் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
75 வீதமான தமிழர்களைக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்களையும், 25 வீதம் கொண்ட முஸ்லிம்களுக்கு இரண்டு பிரதிநிதிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையில் தொகுதி பிரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதை ஓர் அபாய எச்சரிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம். தேசிய அரசில் மகிந்த தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணிப்பதற்கான முதல்கட்ட பேச்சை மேற்கொண்டுள்ளோம்.