தன் இரு பிள்ளைகளுக்கு நச்சுத் திராவகம் கொடுத்துத் தானும் அதை அருந்திய தந்தை சிகிச்சை பயனின்றி 6 நாள்களின் பின்னர் உயிரிழந்தார்.
சாவகச்சேரி, வடக்கு மடத்தடியைச் சேர்ந்த கந்தசாமி சுரேஸ்குமார் (வயது-35) என்பரே உயிரிழந்தார். அவரது பிள்ளைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கடந்த 30ஆம் திகதி இரவு வேலையில் இருந்து வீட்டுக்கு வந்த சுரேஸ்குமார் மென்பானத்துக்குள் நச்சுத் திராவகத்தைக் கலந்து இரு பிள்ளைகளுக்கும் பருகக் கொடுத்துள்ளார். தான் நச்சுத் திராவகத்தை அருந்தியுள்ளார்.
அதை அறிந்த அயலவர்கள் மூவரையும் உடனடியாக சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சுரேஸ்குமார் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் உயிரிழந்தார். இது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.