தற்போது வடக்கு உட்பட நாடு முழுவதும் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தற்போது வெப்பநிலை 35 பாகை செல்சியஸ் வரை அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். கால்நடைகளும் அவதியுறுகின்றன.
அதிகமான வெப்பநிலையைத் தாக்குப்பிடிக்க நாளொன்றுக்கு 2 லீற்றர் நீர் அருந்த வேண்டுவது அவசியம் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சிறு பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லீற்றர் நீர் வழங்குவதும் பாதுகாப்பானது. இந்த நாள்களில் அடிக்கடி குளிப்பதும் நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பமான காலநிலையின் போது பயணங்களில் ஈடுபட வேண்டாம். கூடியளவு குடைகளை பயன்படுத்த வேண்டும். தொப்பி மற்றும் வெள்ளை நிறத்திலான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.