கோட்டாபய ஜனாதிபதியானால் அவருடன் இருக்கும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்ற மாபியா குழுவினரே நாட்டின் நிருவாகத்தை மேற்கொள்வார்கள் எனவும், இது ஆபத்தானது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக அவருடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினால் நன்றாக இருக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்குப் பதிலாக சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கினால் நன்றாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர். ஆட்கள் மாறினாலும் அவர்களால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது கடந்த கால அனுபவம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனாலேயே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஜே.வி.பியின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.