கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் பல குறைபாடுகள்
சகல குற்றங்களில் இருந்தும் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் கோரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டபூர்வமானது அல்ல என்று, ஜனாதிபதி சட்டத்தரணி இன்று உயர்நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார்.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றும் நோக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு மனு, முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து பேர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி சட்டத்தரணி அணில் சில்வா, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறைபாடுகள் அதிகம் இருப்பதாக கூறினார்.
அந்த வழக்கின் தீர்ப்பு, துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றும் நோக்கில் ஒருநீதிபதியால் உருவாக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்பட்ட சாட்சி, சந்தேகம் இன்றி நிரூபிக்கப்பட்டதா என்பதை ஆராயாமல், அரச சட்டத்தரணியின் வாதத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு நீதிபதி அந்த தீர்ப்பை எழுதியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக துமிந்த சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான எந்த சாட்சியும் வழக்கு விசாரணையின் போது முன்வைக்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி இதன்போது உயர்நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.
ஏனைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்பில்லாத சாட்சிகள் முன்வைக்கப்பட்டதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி, அந்த சாட்சிகளின் 62 முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகள் வழக்கு விசாரணையின் போது அடையாளப்படுத்தப்பட்டதாக கூறினார்.
தீர்ப்பு வழங்கும் போது இந்த விடயங்களைக் கருத்திற்கொண்டு அதன் அனுகூலத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவின் தரப்புக்கு வழங்க வேண்டும் என்றும், அது கருத்திற் கொள்ளப்படாது விடப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதுதவிர முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வாவை குற்றவாளியாக மாற்றுவதற்கு தேவையான போலி சம்பவம் சித்தரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி தர்க்கரீதியாக நிரூபித்தார்.
அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்தசில்வா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம், பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர தரப்பினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தீர்ப்பு வழங்களின் போது அது கருத்திற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.
போலியாக சித்தரிக்கப்பட்ட சம்பவம் மற்றும் சாட்சியை அடிப்படையாக கொண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சார்பில் முன்னிலையான தரப்பினர் முன்வைத்த விடயங்கள் மற்றும் சமர்பனங்கள் கருத்திற்கொள்ளாது மேல் நீதிமன்ற வழக்கு விசாரணை இடம்பெற்றுள்ளதாக உயர் நீதிமன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் போது தமது கட்சிக்காரருக்கு சகல பிரஜைகளுக்கும் கிடைக்கப்பெற வேண்டிய நீதியான வழக்கு விசாரணை கிடைக்கப்பெறவில்லை எனவும் ஜனாதிபதி சட்டதரணி சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக சட்டதிற்கு முரணாக தண்டனை வழங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை ரத்து செய்து சகல குற்றங்களில் இருந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை நிரபராதியாக்கி விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டதரணி அணில் டி சில்வா உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.
இதனையடுத்து, ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் மேன்முறையீடு இன்று 3வது நாளாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, விளக்கங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டதரணி அனூஜ பிரேமரத்ன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டபூர்வமானது அல்லவென குறிப்பிட்டார்.
அதன் 10 குறைப்பாடுகளை சுட்டிக்காட்டிய அவர் ஆதாரங்கள் அல்லது சாட்சிகளின் விளக்கங்களை கருத்திற்கொள்ளாமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா பிரபல நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விடயத்தை மாத்திரமே கருத்திற்கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கின் தீர்ப்பை பல லட்சம் தடவைகள் வாசித்தாலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக அறிவித்தது எவ்வாறு என்பதை கண்டறிய முடியவில்லை என ஜனாதிபதி சட்டதரணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்குவதற்காக முன்வைக்கப்பட்ட பொய் சாட்சிகள் மற்றும் முரண்பாடுகள் வழக்கு விசாரணையின் போது அடையாளப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அவை கருத்திற்கொள்ளப்படாமைக்கான காரணம் அறிவிக்கப்படாது, ஒருதலைபட்ச தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டதரணி அனூஜ பிரேமரட்ன தெரிவித்தார்.
துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றத்திற்கு மேல் நீதிமன்றம் தண்டனை வழங்கிய போதும் அதற்கான எந்த வித சாட்சிகளும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
அதன் காரணமாக மூவரடங்கிய நீதிபதி குழாமில் ஒரு நீதிபதிக்கு குறித்த குற்றத்திற்காக தண்டனை வழங்க முடியாது என வழக்கின் தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
அதன்காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை குற்றவாளியாக்கிய தீர்ப்பு நிச்சயமாக ஒரு உண்மையான தீர்ப்பு அல்லவென ஜனாதிபதி சட்டத்தரணி அனூஜ பிரேமரத்ன உயர்நீதிமன்ற ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் நிரூபித்தார்.
மேலதிக விசாரணைகளுக்காக மேன்முறையீடு நாளை மறுதினம் மீண்டும் ஆராயப்படவுள்ளது.