ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி பாராளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தமையே ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையில் எதுவும் விசேடமாக இல்லை. உற்சவம் ஒன்றை நடத்தி பாராளுமன்றத்துக்கு வருகைதந்து உரையாற்றிச் சென்றமையே இடம்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு புதிய அமர்வொன்றை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதிகள், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டங்கள் அல்லது எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியே குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரையில் ஒரு விடயமாவது புதியதாகக் குறிப்பிடப்படவில்லை. அரசாங்கத்துக்குள் முரண்பாடு உள்ளது என்பதை ஜனாதிபதியே தனது உரையிலேயே கூறியிருந்தார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.