அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பிரதி சபாநாயகர் ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தனர்.
இதற்கு அமைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 129 ஆக குறைந்துள்ளதுடன் எதிர்க்கட்சி வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
ஆளும் கட்சியில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் 106 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
எதிர்க்கட்சி வரிசையில் கூட்டு எதிர்க்கட்சியின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்கள் மக்கள் விடுதலை முன்னணியின் 6 உறுப்பினர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஈபிடிபி, ஆகியவற்றின் தலா ஒரு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 உறுப்பினர்களும் அங்கம் வகிக்கின்றனர்