முப்படை வீரர்கள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு 110 சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்வு இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் மகேஷ் சேனநாயக தலைமையில் நடைபெற்றது.
எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் நற்பணி மன்றத்தின் இஸ்லாமிய ஆன்மீக வளர்ச்சி நிலையத்தின் ஏற்பாட்டில்;; சகல சமூகங்களுக்கிடையிலும் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் கடந்த சனிக்கிழமைகாலி முகத்திடலில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
பெரும்பான்மை மத மற்றும் இஸ்லாமிய சமூகங்களுக்கிடையே மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.சீ.ஏ ஹமீட் ஹாஜியார் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் மகேஷ் சேனநாயகவிடம் 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 5 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தநன்கொடை நிகழ்வானது, இராணுவ வீரர்கள், சிறுவர்கள், மற்றும் வயோதிபர்களுக்கும் சக்கர நாற்காலிகளை தொடர்ந்தும் வழங்கிவருகின்றது.
இவ்வாறு சக்கர நாற்காலிகளை பெறுபவர்கள் நாடு பூராகவுமுள்ள இராணுவம், பொலிஸ் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரால் தெரிவு செய்யப்படுகின்றனர்.