அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரையில் புதிதாக எந்தவொரு விடயமும் இல்லையென கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெறுமனே நிகழ்வொன்றை நடத்தி நாடாளுமன்றத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தமையே அரச தலைவரால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு புதிய அமர்வொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அரச தலைவர்கள், அரசால் முன்னெடுக்கப்படவுள்ள புதிய வேலைத்திட்டங்கள் அல்லது எதிர்கால செயற்றிட்டங்கள் பற்றியே குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் உரையில் ஒரு விடயமாவது புதியதாகக் குறிப்பிடப்படவில்லை. அரசுக்குள் முரண்பாடு உள்ளது என்பதை மைத்திரி தனது உரையில் கூறியிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.