நுண்கடன் நிறுவனம் ஒன்றில் பெற்ற கடனை அறவிடச் சென்ற அந்த நிறுவன ஊழியர்கள் கொடுத்த தொல்லை தாங்க முடியாமல் இளம் தாயொருவர் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் வடக்கில் இந்த சம்பவம் நேற்று நடந்தது.
இரண்டு பிள்ளைகளின் தாயான சுதாகரன் தர்சிகா (25) என்பவரே உயிரை மாய்த்துக்கொண்டார்.கடந்த மூன்றாம் திகதி இந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் செலுத்த வேண்டிய பணத்தை கேட்டு இவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
மதியம் வீட்டுக்கு வந்த கணவனிடம் நடந்த விடயத்தை அந்த பெண் கூறியுள்ளார். அப்போது பணம் இல்லாததால்,வேறு யாரிடமாவது கடனை பெற்று நிதி நிறுவன கடனை அடைக்குமாறு கணவன் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பிற்பகல் 3 மணிக்கு வீட்டுக்கு பின்னால் சென்ற பெண், மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொண்டதாக விசாரணையில் தெரியந்துள்ளது.
மனைவி தீயில் எரிந்துகொண்டிருப்பதை கண்ட கணவன், தீயை அணைத்து அவரை யாழ் ாதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். கடந்த நான்கு நாட்களாக தீவிர சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.