இந்தியாவின் பிகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு மாதம் ஒன்பது லட்சம் ரூபாய் சம்பளத்துளடன் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
பிகாரை சேர்ந்த 25 வயதுடைய மதுமிதா பெங்களுரில் உள்ள ஏ.பி.ஜி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வருடத்துக்கு ஒரு கோடியே எட்டு லட்சம் ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியிருக்கிறது.
இது தொடர்பாக மதுமிதாவின் தந்தை தெரிவிக்கையில் :- என்ஜினியரிங் துறை; பெண்களுக்கு ஒத்துவராது என இருந்தேன் ஆனால் அந்த துறையை பல பெண்கள் நாடி செல்வதை பார்த்ததால் அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு மதுமிதாவை பொறியியல் படிப்பில் சேர்த்தேன். 2014 இல் மது கணிணி பொறியியல் துறையில் பட்டம் பெற்று தற்போது இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் என அவருடைய தந்தை பெருமதிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும் மதுமிதாவின் ஆதர்ச மனிதர் என்றால் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்தான். அப்துல்கலாம் எழுதிய புத்தகங்கள் அவருடைய சுயசரிதைகளை விரும்பி படிக்கும் மதுமிதாவிற்கு அவருடைய எண்ணங்கள் தாக்கத்தை ஏறபடுத்தி உத்வேகம் அளித்தன என அவருடைய தந்தை தெரிவித்துள்ளார்.
கூகுளின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் மதுமிதாக திங்கள்கிழமை வேலைக்கு சேர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.