ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தும் பலமான சக்தியாக உருவாகுவதே எமது இலக்காகும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் செயற்பட்ட 16 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளோம்.
சுயாதீனமாக தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி எமக்கு அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய நாம் எதிரணியில் அமர தீர்மானம் எடுத்த போது கூட்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் எமக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறாடாவான அனுரகுமார திசாநாயக ஆகியோருடன் இணைந்து எதிர்க்கட்சியின் பிரதான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவும் தாம் தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.