நீர்வேலியில் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த திங்கட் கிழமை இரவு, நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வைத்து இரண்டு இளைஞர்கள் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டிருந்தது. ஆவாக் குழுவைச் சேர்ந்த 8 பேரே இதனை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவரை இணுவில் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். அவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.