முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர்.
காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை திறந்து வைக்கப்படவுள்ளன.
ஜப்பானின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 2014ஆம் ஆண்டு, 7 பில்லியன் ரூபாய் மதிப்புடைய இந்த திட்டம், மஹிந்த அரசாங்கத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
குறித்த பாலங்களுக்கான நிர்மாணப் பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்னரே நிறைவுசெய்யப்பட்டு பெயர்ப் பலகை பொருத்தப்பட்டு, போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பாலங்களை மீண்டும் திறந்துவைக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திறப்பு விழாவிற்கென குறித்த பாலங்களுக்கு அருகே நினைவுப் பலகை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.